புவி வெப்பநிலையை ஆராய புதிய செயற்கைக்கோளை செலுத்தியுள்ள நாசா
பூமியின் சமுத்திரங்கள், வளிமண்டலம் மற்றும் புவி வெப்பநிலை போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக 'பேஸ்' என்ற புதிய செயற்கைக்கோளை நாசா விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
குறித்த செயற்கைக்கோள், இன்றையதினம் (08.02.2024) கேப் கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பல்கன் என்ற ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ரொக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்கு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள இந்த செயற்கைக்கோளானது பூமியில் இருந்து 420 மைல்கள் உயரத்தில் மிதக்கவுள்ளது.
செயற்கைகோளின் துல்லியம்
அதேவேளை, இதில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு அறிவியற் கருவிகள் பூமியை துல்லியமாக தினமும் படம் பிடிக்கவுள்ளதோடு மாதாந்த அளவீடுகள் மற்றுமொரு கருவியின் மூலம் எடுக்கப்படவுள்ளது.
We have liftoff ?
— NASA (@NASA) February 8, 2024
Our PACE spacecraft is on its way to study microscopic organisms in our ocean and particles in the air. pic.twitter.com/SvxY1EErdx
அத்துடன், இதற்கு முன் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விட இந்த செயற்கைகோள் பூமியை மிக துல்லியமாக காட்டும் என திட்ட விஞ்ஞானி ஜெர்மி வெர்டெல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வானிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்கவும் புவி வெப்பநிலை மாறுதல்களை விவரிக்கவும் இந்த செயற்கைக்கோள் பயன்படும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |