டுவிட்டர் - லிங்க்டின் பயனர்களின் 26 பில்லியன் தனிப்பட்ட தகவல்கள் கசிவு
டுவிட்டர் மற்றும் லிங்க்டின்(Linkedin) ஆகிய செயலிகளில் போதுமான பாதுகாப்பு இல்லாத கணக்குகளில் இருந்து 26 பில்லியன் தகவல்கள் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் 26 பில்லியன் கசிந்த பதிவுகளைக் கொண்ட ஒரு பெரிய தரவுத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செக்யூரிட்டி டிஸ்கவரி மற்றும் சைபர்நியூஸ் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே தகவல் கசிவு தொடர்பில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
தகவல் கசிவு
இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட தரவுத்தளமானது ஹேக்கர்கள் மூலம் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சி குழு தகவல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் தகவல் கசிவு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள, லிங்க்ட்இன் செய்தித் தொடர்பாளர், "இந்த உரிமைகோரல்களை முழுமையாக விசாரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் லிங்க்ட்இன் அமைப்புகள் மீறப்பட்டதற்கான எந்த ஒரு தாக்கங்களையும் நாங்கள் காணவில்லை." என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
