மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பல்: பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா
மாலைதீவை நோக்கி நகரும் சீன உளவுக்கப்பலை இந்திய கடற்படை நோட்டமிட ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் சீனாவின் சியாங் யாங் ஹாங் 03 கப்பலானது இந்திய பெருங்கடலில் தற்போது நுழைந்துள்ளதாகவும் இதன் காரணமாக இந்திய கடற்படையானது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் மாலைத்தீவுக்கு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்தது.
சீன உளவுக்கப்பல்
இதற்கமைய மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின், சீனாவுக்கான விஜயத்தின்போது மாலைத்தீவு மற்றும் சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்தியாவிற்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வரும் சீனா தற்போது மாலைத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது.
இந்நிலையில், சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளது.
எனினும் தங்கள் கடற்பரப்பில் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைய இலங்கை அரசு அண்மையில் தடை விதித்த நிலையில், சீன உளவு கப்பல் மாலைத்தீவை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |