உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கிய தகவல்களை அம்பலப்படுத்தக் காத்திருக்கும் எதிர்க்கட்சி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கியமான சில தகவல்களை அம்பலப்படுத்த தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை விவாதத்தின்போது அவற்றை அம்பலப்படுத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
குறித்த விவாதத்தை குறைந்தது இரண்டு நாட்களாவது நடத்தினால் நன்றாக இருக்கும்.
அதே நேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நீதியாக நடைபெற வேண்டுமாக இருந்தால் பாதுகாப்பு பிரதியமைச்சர் பதவி விலக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா



