கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய சாதனை (Photos)
கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையானது குறுகிய காலப்பகுதிக்குள் 37 உள்ளூர் வீதிகளை அமைத்திருப்பதானது உள்ளூராட்சி வரலாற்றில் சாதனையாகும் என்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதா உல்லா அகமட் ஸகி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் 2022 ம் ஆண்டுக்கான முதலாவது மாநகர பொதுச்சபை அமர்வு இன்று (06) இடம்பெற்றது.இதன்போதே முதல்வர் மேற்படி உரையாற்றினார்.
தொடர்ந்தும் அங்கு அவர் உரை நிகழ்த்துகையில்,
அக்கரைப்பற்றின் வரலாற்றில் இதுவொரு மைல் கல் சாதனை என்றே சொல்ல வேண்டும். 2021 ம் வருடத்தில் நமக்கு வழங்கப்பட்டிருந்த 50 வீதிகளில் இதுவரை 37 வீதிகளை பூரணமாக அபிவிருத்தி செய்திருக்கின்றோம். உண்மையில் இவ்விடயமானது மிகுந்த மகிழ்ச்சிக்கும் பெருமைக்குரியதுமாகும்.
ஏனைய வீதிகளின் நிர்மாண பணிகளையும் வெகு துரிதமாக அபிவிருத்தி செய்து மக்களிடம் கையளிப்பதற்கு நாம் ஒருமித்து செயற்பட்டு கொண்டிருக்கின்றோம்.
இவ்விடயத்தில் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், உரிய அதிகாரிகள் அனைவருக்கும் இவ்வேளையில் மானசீகமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், கோவிட் பெரும் தொற்று வேளையிலும் அக்கரைப்பற்று மண் வெகுவாக நிலை குலைந்து போனது. அதிலிருந்தும் நாம் இப்போது மீண்டு வந்திருக்கின்றோம்.
எஞ்சி இருக்கும் காலத்திலும் எமது மக்களின் சுபீட்சமான எதிரகாலத்திற்காகவும், வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும் நாம் அனைவரும் ஒத்த கருத்தில் பயணிக்க வேண்டும் என்று இவ் உயரிய சபையினை வேண்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய சபை அமர்வின் போது 2022ம் ஆண்டுக்கான நிலையியல் குழுக்கள் தெரிவு செய்யும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
