யானை - மனித மோதலுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் புதிய திட்டம்
இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு ஒரு நிலையான தீர்வாக மூங்கில் 'உயிரியல் வேலி' (bio-fences) அமைக்கும் திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையத்திற்கு (ICBR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஆராயப்பட்டுள்ள விடயம்
இந்தச் சந்திப்பின் போது, மூங்கில் பயிர்ச்செய்கை, நவீன பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்துறை தயாரிப்புகள் குறித்து இலங்கைத் தூதுக்குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.
யானை - மனித மோதலைக் குறைப்பதற்கு மூங்கில் உயிரியல் வேலிகளை உருவாக்க சீனாவின் உதவியை இலங்கை கோரியிருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம் ஆதரவளிக்க சீனத் தரப்பு உறுதியளித்துள்ளது.
கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri