கல்வி அமைச்சின் புதிய வேலைத்திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தகவலை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.
புதிய வேலைத்திட்டம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“கல்வி அமைச்சின் இந்த வேலைத்திட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்தில் உள்ள 07 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக பொழுதுபோக்கு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan