ஆசிரியர்களுக்கான விசேட அறிவிப்பு
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
விசேட அறிவிப்பு
அறிக்கை ஒன்றின் மூலம் பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி தர்மசேன இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கான ஆசிரியர்கள், வழிகாட்டல் கோவையின் நிபந்தனைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
வழிகாட்டல் நிபந்தனைகள்

மேலும் தெரிவிக்கையில்,“விடைத்தாள்களை திருத்துவதற்கான ஆசிரியர் தெரிவு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறும்.
விடைத்தாள்களை திருத்துவதற்கான ஆசிரியர் தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிபந்தனைகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக அறிந்துக்கொள்ள முடியும்.
மேலும், இணைய வசதியற்ற ஆசியரியர்கள் 011 2 785 231 அல்லது 011 2 785 216 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் வாயிலாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.”என தெரிவித்துள்ளார்.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan