நெல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு புதிய சிக்கல்
நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள போதிலும் நேற்று(07.02.2025) வரை விவசாயிகளால் நெல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் குறைந்த உத்தரவாத விலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் போன்ற காரணங்களால் விவசாயிகள் அறுவடையை நிறுத்தியதே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.
அத்துடன், தனியார் அரிசி ஆலைகள் அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விட அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவிப்பதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
உத்தரவாத விலைகள்
கடந்த வியாழக்கிழமை(05.02.2025) அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலைகளை அறிவித்திருந்தது.
இதற்கமைய, நாட்டு நெல்லை 120 ரூபாவிற்கும் சம்பா நெல்லை 125 ரூபாவிற்கும் கீரி சம்பா நெல்லை 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![பிக்பாஸ் புகழ் ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார், ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ](https://cdn.ibcstack.com/article/e2e1cc8b-1a0a-4a48-9f21-b58e2287b57c/25-67a5ed0769138-sm.webp)
பிக்பாஸ் புகழ் ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார், ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)