இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவராக புதியவர் தெரிவு
இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளத்தின் புதிய தலைவராக சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமரசூரிய முன்னர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கங்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். அத்துடன், விரிவான மேல்முறையீட்டு நீதிமன்ற அனுபவத்தை கொண்டுள்ளார்.
இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு தரநிலைகள் கண்காணிப்பு சபையின் உறுப்பினரான அவர், பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் சட்டப் படிப்புகளுக்கான நிலைக்குழு மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சபை உறுப்பினர் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகிக்கிறார்.
நிர்வாகக் குழுவின் உறுப்பினர்
அவர் பொதுநலவாய சட்டக் கல்வி சங்கத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
அதேநேரம், 2024 ஜனவரி 31 அன்று, அவர் இலங்கை மத்திய வங்கியில் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
