ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பின் பின் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியா - ஏமாற்றமா..!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் வரவு செலவு திட்டம் ஜனாதிபதியினால் 2025.02.17ஆம் திகதி முன்மொழியப்பட்டுள்ளது.
அதில் முக்கியமாக, அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவித்துள்ளார்.
இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும், சம்பள அதிகரிப்பிற்கு மேலதிகமாக வருடாந்த சம்பள அதிகரிப்பு 80 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறைந்த நடுத்தர வகுப்பிலான அரச ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளியல் துறை போராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
