இலங்கையை உலுக்கிய நீதிமன்ற படுகொலை! பெரும் நெருக்கடியில் அநுர அரசு
இன்றையதினம் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது "கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ள இந்த படுகொலை தொடர்பில் பல விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்திலும் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நாட்டினுடைய ஜனாதிபதியும் முப்படைகளின் பிரதானியுமாக இருக்ககூடியவர் இதுவரை எந்த கருத்தினையும் பதிவு செய்யாததும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் மிகவும் பலம் பொருந்திய பாதுகாப்பான இடமான நீதிமன்ற வளாகத்தில் இவ்வாறு கொலை நடைபெறுகின்றமையானது நாட்டின் சட்டத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், பல குற்றவாளிகளும் இவ்வாறான செயல்களில் ஈடுபடலாம் என்ற தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விடயம் குறித்த விடயங்களை அலசி ஆராய்கின்றது ஐபிசியின் செய்திகளுக்கு அப்பால்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
