இலங்கையை இன்று உலுக்கிய படுகொலையின் பின்னணியில் பெண் - பெண் தொடர்பான தகவல்
பிந்திய தகவல்
கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவ வந்த பெண்ணின் புகைப்படங்கள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, புகைப்படத்தில் உள்ளவர் தேவகே இஷாரா செவ்வந்தி என பெண் என பொலிஸார் தெரிவித்துளளார்.
கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருடன் மற்றொரு பெண்ணும் வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபரான பெண் வழக்கறிஞர் போல் உடையணிந்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன், பின்னர் அந்த பெண் துப்பாக்கியை சந்தேக நபரிடம் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவியல் நடைமுறை
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் வகை துப்பாக்கி வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் குற்றவியல் நடைமுறைச் சட்ட புத்தகத்தை வெட்டி மறைத்து வைத்திருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன, நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டு, வெளியேற முயன்ற போது, அவருக்கு அருகில் சென்று அவரது மார்பில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்து, பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பின்னர் துப்பாக்கியை சம்பவ இடத்திலேயே கைவிட்டு, சாட்சி கூடத்திற்கு அருகில் இருந்த கதவு வழியாக தப்பிச் சென்றதாகவும் அவர் கூறினார்.
சஞ்சீவ குமார சமரரத்னவின் பாதுகாப்பிற்காக 12 பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
சந்தேக நபர்கள்
அந்த நேரத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த மக்கள் பதற்றமடைந்தமையினால் சந்தேக நபரை பிடிக்க முடியாமல் போனதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பெண் சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.
இரண்டு சந்தேக நபர்களும் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.
You May Like THis

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam
