மகேஸ் தீக்ஷனவிற்கு புதிய பதவி
பிரபல கிரிக்கெட் வீரரும் இராணுவ வீரருமான மகேஸ் தீக்ஷனவிற்கு இலங்கை இராணுவம் பதவி உயர்வு வழங்கியுள்ளது.
அண்மையில் ஆசிய கிண்ண போட்டித் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக தீக்ஷன திகழ்கின்றார்.
வீர வீராங்கனைகள் கௌரவிப்பு
இந்தநிலையில் விளையாட்டுத்துறையில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய இராணுவத்தை சேர்ந்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் இராணுவ தலைமையகத்தில் நேற்று நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி, ஆசிய கிண்ண வலைபந்தாட்டம் மற்றும் ஆசிய ஆணழகன் போட்டி போன்றவற்றில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ சார்ஜன்ட்
அத்துடன் மகேஸ் தீக்ஷன இராணுவ சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் மகேஸ் தீக்ஷன உள்ளிட்ட வீர வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளன.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
