போர் இனிமேல் வேண்டாம்: புதிய பாப்பரசர் வல்லரசுகளுக்கு வேண்டுகோள்
போர் இனிமேல் போர் வேண்டாம் என புதிய பாப்பரசர் லியோ ஓஐஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட பின்னர், வத்திக்கானில் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை ஆசீர்வாதத்தின் போது உலக வல்லரசுகளுக்கு அனுப்பிய செய்தியில், அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
உக்ரைன் போரில் நீடித்த அமைதி வேண்டும், காசாவில் போர் நிறுத்தம் வேண்டும், அதே போல் இந்தியாவுக்கும்; பாகிஸ்தானுக்கும் இடையிலான சனிக்கிழமை ஒப்பந்தத்தை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவியேற்பு
அடுத்த வாரம் மே 18 அன்று புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் ஒரு திருப்பலியின்போது, பாப்பரசர் லியோ முறையாகப் பதவியை ஏற்றுக்கொள்வார்.
முன்னதாக வத்திக்கான் நகரில் இடம்பெற்ற இரண்டு நாள் மாநாட்டைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
