உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அச்சுறுத்தல்! சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
மனிதர்களுக்கு தொற்றும் பறவை காய்ச்சல் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாலூட்டும் விலங்குகளிடையே அடையாளம் காணப்பட்டுள்ள பறவைக்காய்ச்சலில் மனித மாறுபாட்டின் சாத்தியம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பறவைகளில் இருந்து பாலூட்டும் விலங்குகளுக்கு தொற்று பரவியுள்ள நிலையிலேயே உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதுவரை பறவை காய்ச்சல் பறவைகளில் மட்டும் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது நீர்நாய்கள், நரிகள் மற்றும் மிங்க் ஆகியவற்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மனிதர்களைப் பாதிக்கும் வாய்ப்பு அதிகளவு உள்ளமையினால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளதுடன், உரிய நடவடிக்கை முன்னெடுக்க நாடுகள் தயாராக வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கேட்டுகொண்டுள்ளது.





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
