புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவில் உள்வாங்கப்பட்ட முன்னனி வீரர்கள்
இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் ஓய்வு பெற்ற நான்கு வீரர்களை கொண்ட புதிய தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி முன்னாள் தொடக்க வீரர் உபுல் தரங்க தலைமையிலான புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவில் சுழற்பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா மற்றும் அஜந்த மெண்டிஸ் மற்றும் முன்னாள் தொடக்க வீரர் தரங்க பரணவிதான ஆகியோர் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
புதிய கிரிக்கெட் தேர்வுக் குழு
இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த வாரத்திற்குள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்றையதினம் நாடாளுமன்றில் (04.12.2023) தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் இன்று புதிய கிரிக்கெட் தேர்வுக் குழுவானது முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவின் தலைமையில் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
