தேர்தல்களைக் குறிவைத்து உருவாகவுள்ள புதிய இடதுசாரிக் கூட்டணி
தேர்தல்களைக் குறிவைத்து இடதுசாரிக் கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தெற்கு அரசியலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த முயற்சியில் விமல் வீரவன்ச(Vimal Weerawansa), வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara), உதய கம்மன்பில(Udaya Kammanpila), கம்யூனிஸ் கட்சி பிரதிநிதிகள், டலஸ் அழகப்பெரும(Dullas Alahapperuma), ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe) உள்ளிட்ட தரப்பினர் இணைந்துள்ளதுடன் தயாசிறி ஜயசேகரவும்(Dayasiri Jayasekara) இதில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.
இடதுசாரிக் கூட்டணி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே இந்தக் கூட்டணிக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இடதுசாரிக் கூட்டணியாக மே தினத்தை நடத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டு வருவதுடன் விமல் தரப்பின் மே தினக் கூட்டம் கிருலப்பனையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் நபர் ஒருவரை ஆதரிப்பதா அல்லது தமது அணியில் ஒருவரைக் களமிறக்குவதா என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விஜயதாஸ ராஜபக்சவை இடதுசாரிக் கூட்டணியில் களமிறக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இது பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |