இளைஞன் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதல்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
அநுராதபுரம் - மதவாச்சி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இளைஞன் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரைவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
அந்த இளைஞன் மீது பொலிஸார் நடத்திய கொடூரத் தாக்குதலின் விளைவாக கடந்த 9 ஆம் திகதி அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சத்திரசிகிச்சை மூலம் அவரது விதைப்பை ஒன்று அகற்றப்பட்டது.
மிருகத்தனமான நடவடிக்கை
இந்தநிலையில், சட்டத்தின் முழு அளவிற்கு குறித்த குற்றவாளிகள் பொறுப்புக்கூற வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றும்போது மேற்கொள்ளும் எந்தவொரு மிருகத்தனமான நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.

அந்த உடன்படிக்கை, சித்திரவதை அல்லது எந்த விதமான கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனையை சந்தேகத்திற்கு இடமின்றி தடைசெய்கிறது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri