தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lankan Tamils TNA S. Sritharan Suresh Premachandran
By Theepan Jan 26, 2024 06:56 PM GMT
Report

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரனுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும்,  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் ஐக்கியத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்திருப்பதை வரவேற்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியராகிய நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன்படி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

சிறைச்சாலைகளாக மாற்றமடையும் இரு அரசாங்க கட்டடங்கள்

சிறைச்சாலைகளாக மாற்றமடையும் இரு அரசாங்க கட்டடங்கள்

பாரம்பரியமிக்க ஒரு கட்சி

“தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிவஞானம் சிறிதரனுக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டு, இராஜவரோதயம், ராசமாணிக்கம், வன்னியசிங்கம், நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றோரால் தலைமை தாங்கப்பட்டு, தமிழ் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பாரம்பரியமிக்க ஒரு கட்சியின் தலைவராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றீர்கள்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள கோரிக்கை | New Leader Tna Sritharan Support S Premachandran

தமிழரசுக் கட்சி தனித்து நின்று, தனது கோரிக்கைகளை வெல்ல முடியவில்லை என்ற காரணத்தினால் இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்றவை இணைந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிய பாரம்பரியமும் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்றது.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக 1976ஆம் ஆண்டிலிருந்து தனது கட்சியான தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தாமல், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பதே தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் ஓர் ஐக்கிய முன்னணி என்பதை தந்தை செல்வா அடையாளம் காட்டினார்.

தமிழரசு கட்சியின் பெரும் உடைவை தடுக்குமா பொதுச்செயலாளர் பதவி

தமிழரசு கட்சியின் பெரும் உடைவை தடுக்குமா பொதுச்செயலாளர் பதவி


அதன் பின்னர், 1985ஆம் ஆண்டில் பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழப்புரட்சி அமைப்பு ஆகியோர் இணைந்து திம்பு கோட்பாடு எனப்படும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதுவே தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடைப்படையாகக் கொள்ளப்படுகின்றது.

கருணா மட்டுமல்ல அனைவருடனும் இணையத் தயார்: வியாழேந்திரன்

கருணா மட்டுமல்ல அனைவருடனும் இணையத் தயார்: வியாழேந்திரன்

தமிழ் தேசிய கூட்டணி

2002ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயற்பட்டு வந்தனர்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக விடுதலைப் புலிகள் ஆயுதப்போராளிகளாக செயற்பட்ட வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக வழிமுறையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள கோரிக்கை | New Leader Tna Sritharan Support S Premachandran

இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் செயற்பட்டு வந்தார்கள். சம்பந்தனால் தலைமையேற்று நடாத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவிய பல்வேறு முரண்பாடுகள் காரணமாக அதில் இணைந்திருந்த பல கட்சிகளும் தனிநபர்களும் வெளியேறியது மாத்திரமல்லாமல், இறுதியில் 2023ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தாங்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற காரணத்திற்காக, அவர்களும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்கள்.

அதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்துள்ளது. இந்த நிலையில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் ஆகியோர் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்துள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு யாப்போ அமைப்பு வடிவமோ இல்லாத காரணத்தால் கூட்டமைப்பிற்குள் பல்வேறு முரண்பாடுகள் அவ்வப்போது தோற்றம் பெற்றது. இவற்றை நிவர்த்தி செய்யும்பொருட்டு, நாம் உருவாக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்காக ஒரு யாப்பு வரையப்பட்டிருக்கின்றது.

அது தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டும் இருக்கின்றது. இந்தக் கூட்டணிக்கென்று குத்துவிளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி, யாப்பின் அடிப்படையில் நிறைவேற்றுக்குழுவையும் கட்சிக்கான கட்டமைப்பையும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு மகா சங்கத்தினர் ஆதரவு

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு மகா சங்கத்தினர் ஆதரவு

கட்சிகளின் ஒன்றினைவு

இந்த நிலையில் காலத்தின் தேவை கருதி, 2002ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோதும் அதனைப் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் அங்கம் வகித்த பல்வேறு கட்சிகள் தொடர்ந்தும் கோரிக்கைகளை வைத்தபோதும் தமிழரசுக் கட்சி அதற்கு செவிசாய்க்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 22வருட காலமாக தமிழ் மக்களுக்காகப் போராடும் ஒரு அரசியல் கட்சியாக தன்னை நிறுவனப்படுத்திக்கொள்ளாமல், தேர்தல் காலங்களில் கூட்டாகவும் பின்னர் தமிழரசுக் கட்சியாக முடிவெடுத்துச் செயற்படுவதுமே இன்றுவரை தொடர்கின்றது. இதன் காரணமாகவே இடைப்பட்ட காலங்களில் பல கட்சிகளும் அதிலிருந்து வெளியேறின.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள கோரிக்கை | New Leader Tna Sritharan Support S Premachandran

இந்த நிலையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிவஞானம் சிறிதரன் அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியோரை ஒன்றிணைத்து 2009ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஊடகங்களினூடாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் ஒருவலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் தீர்க்கமான சிந்தனையுடன் பயணிக்கின்றது.

இதன் அடிப்படையில்தான் ஒரு வருடத்திற்கு முன்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டு, அது இன்றுவரை தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், புதிய புதிய அமைப்புகள் தொடர்பாக சிந்திப்பதை விடுத்து, ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஐக்கிய முன்னணியில் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஏனைய கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.” என்றுள்ளது.

சுமந்திரன் - சிறீதரன் வழங்கிய அதி முக்கிய உத்தரவாதம்

சுமந்திரன் - சிறீதரன் வழங்கிய அதி முக்கிய உத்தரவாதம்

சுமந்திரன் - சிறீதரன் வழங்கிய அதி முக்கிய உத்தரவாதம்

சுமந்திரன் - சிறீதரன் வழங்கிய அதி முக்கிய உத்தரவாதம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US