ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு மகா சங்கத்தினர் ஆதரவு

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka
By Kamal Jan 26, 2024 06:17 PM GMT
Report

மக்கள் நலனுக்காக முன்னெடுக்கும் அனைத்து திட்டங்களிலும் ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினரின் ஆதரவு கிடைக்கும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத் தலைவரும், மேல் மாகாணத்துக்கான பிரதான சங்கநாயக்கருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஜனன தினமான இன்று(26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டிருந்தார்.

அந்நிகழ்வில் இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றிய போதே முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

விசாரணைக்கு எடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு யோசனைக்கு எதிரான மனுக்கள்

விசாரணைக்கு எடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு யோசனைக்கு எதிரான மனுக்கள்

பஞ்ச சீல கொள்கை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனவே பஞ்ச சீல கொள்கையை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தையும் நீங்கள் உருவாக்கித்தர வேண்டும்.

அத்துடன் பௌத்த சாசனத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஏராளமான விடயங்கள் நடந்து வருகின்றது. இவற்றைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு மகா சங்கத்தினர் ஆதரவு | Ranil Enjoys The Support Of The Maha Sangha

இன்றளவில் சில ஊடகங்களினாலும், காவியைப் போர்த்திக்கொண்டவர்களாலும் புத்த தர்மத்திற்கு பொருத்தமற்ற பலச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு புத்தத்துவத்தை பெறுவதற்கு சில கால அர்பணிப்புக்கள் தேவை. ஒரே இரவில் புத்தத்துவம் பெறுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் சாசனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சாசனத்திற்கு பாதிப்புக்களை தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் மகா சங்க அமைப்பு அல்லது மறுசீரமைப்பினை விரைந்து மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். அபயாராமய, அரசியல்வாதிகள் அடிக்கடி வந்துச் செல்லும் இடமாகும். அரசியல் வாதிகள் இந்த விகாரைக்கு நன்கொடைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.

ஆனால் உண்மையாகவே அரசியல் வாதியாகவும் நாட்டின் தலைவராகவும் இந்த விகாரைக்கு நன்கொடை வழங்கியவர் நீங்கள் மட்டுமே. உண்மையான பௌத்தர் என்ற வகையில் உங்கள் கடமையை செய்துள்ளீர்கள் வேறு எந்தவொரு அரசியல்வாதியும் அபயராமவிற்கு உதவியதில்லை என்பதை தெளிவாக கூறுகிறேன்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு மகா சங்கத்தினர் ஆதரவு | Ranil Enjoys The Support Of The Maha Sangha

மகா சங்கத்தினர் முன்னிலை

அரசாட்சி இல்லாவிட்டாலும் இந்நாட்டின் அரசராக நீங்களே உள்ளீர்கள். நீங்கள் நினைத்ததை செய்யக்கூடியவர். சொல்வதை செய்யும் தலைவர். நீண்ட நேரம் கலந்தாலோசிப்பதில்லை. நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள். ஆனாலும் இன்று மகா சங்கத்தினர் சிலரின் செயற்பாடுகள் பௌத்தர்ளின் மனதை புன்படுத்துவதாகவும் அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு மகா சங்கதினரை முன்நிறுத்திய சங்க மறுசீரமைப்பை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக மகா சங்கத்தினர் முன்னிலையாக வேண்டும். அதன் போது உங்களுடைய ஒத்துழைப்பு கிடைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் பல்வேறு விடயங்களை கூறி மக்கள் எண்ணங்கள் திரிபுபடுத்தப்படுகின்றன. அது தொடர்பிலான விரிவான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற வேண்டும்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு மகா சங்கத்தினர் ஆதரவு | Ranil Enjoys The Support Of The Maha Sangha

சாசனத்தை பாதுகாத்தல், மக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட மக்கள் நலன் கருதிய அனைத்து செயற்பாடுகளிலும் மகா சங்கத்தினர் உங்களுக்கு ஆதரவளிப்பர்.

எனவே பஞ்ச சீல கொள்கையை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தையும் நீங்கள் உருவாக்கித்தர வேண்டும். அதேபோல் எமது தாதியர் சங்கத்திற்கு மறக்க முடியாத பணியை ஆற்றியுள்ள நீங்கள் தாதியருக்கான டிப்ளோமாவை வழங்கினீர்கள்.

பல்கலைக்கழகங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் நீண்ட காலம் நிலவிய நிலையில் நீங்கள், உங்கள் பேனா முனையில் அதற்கான தீர்வை வழங்கினீர்கள். அவற்றை நாங்கள் என்றும் மறக்கப்போவதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், பிரதமர் தினேஸ் குணவர்தன, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச, தொழிற்சாலைகள் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, நாடாளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டிருந்தனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட சனத் நிஷாந்தவின் உடல் : வீதியின் இரு மருங்கிலும் காத்திருந்த மக்கள்

சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட சனத் நிஷாந்தவின் உடல் : வீதியின் இரு மருங்கிலும் காத்திருந்த மக்கள்

யாழில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் கைது

யாழில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US