டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம்
டிட்வா சூறாவளியினால் வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்த மற்றும் மண்சரிவு அபாய வலயங்களில் வசிக்கும் தோட்டக் குடும்பங்களுக்காக இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பெருந்தோட்ட மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஆகியோரால் கூட்டாக முன்வைக்கப்பட்ட இந்த யோசனையின் கீழ், பாதுகாப்பான வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் 650 சதுர அடி பரப்பளவிலான வீட்டை நிர்மாணிப்பதற்காக 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த வீடுகள் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் வரைபடங்களுக்கு அமைய நிர்மாணிக்கப்படும்.
10 பேர்ச் காணி ஒதுக்கீடு
தோட்டக் கம்பனிகள் அந்தந்த தோட்டங்களுக்குள் பாதுகாப்பான இடங்களில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 10 பேர்ச் காணியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஒரு தொழிலாளியின் சேவை இனித் தேவையில்லை எனக் கருதப்படும் பட்சத்தில், அவர்கள் வழங்கப்பட்ட 5 மில்லியன் ரூபா மானியத்தைப் பயன்படுத்தி காணியைக் கொள்வனவு செய்து, இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டை அமைப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான முந்தைய அறிவுறுத்தல்களில் தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
இந்த இடைவெளியை நிரப்பும் வகையிலும், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய தோட்டக் குடும்பங்களின் நீண்டகால வீட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam