யாழில் இவ்வருடம் 600 வீட்டுத் திட்டம்: இறுதிப் பட்டியலை காட்சிப்படுத்த கோரும் அமைச்சர் டக்ளஸ்
யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்காக 600 வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுவதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் (காணி) தெரிவித்த நிலையில் இறுதிப் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (04.05.2023) அபிவிருத்தி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட விடயதானங்கள் தொடர்பிலும், வீட்டுத் திட்டம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்ட போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும், வடமாகாண மக்களுக்காக சீன அரசிடம் இருந்து சுமார் 1500 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெறவுள்ள நிலையில் குறித்த நிதியுதவியில் அரிசி, கடற்தொழிலாளர்களுக்கு வலை மற்றும் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
அது மட்டுமல்லாது ஜப்பான் நாட்டு அரசாங்கத்தினால் சுமார் 1600 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெறவுள்ள நிலையில் அதற்கான வேலை திட்டங்களை தயார் செய்து வரும் நிலையில் ஆசிய அபிவிருத்தி வாங்கியும் எமக்கு உதவத் தயாராக இருக்கிறது.
ஆகவே நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் புதுடில்லி செல்ல உள்ள நிலையில் இந்தியாவும் எமக்கு பல மில்லியன் ரூபாய் உதவித் திட்டங்களை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் மேலதிக அரச அதிபர் முரளிதரன் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் 10 இலட்சம்
ரூபா வீட்டு திட்டங்கள் 379ம், ஆறு இலட்சம் ரூபாய் வீட்டு திட்டங்கள் 221ம்
வழங்கப்படவுள்ளன.
இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படாத நிலையில் செயற்பாடுகள் முன்னெடுப்பு
யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவிலும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட அதாவது நலன்புரி நிலையங்களில் இருந்தோர், விசேட தேவையுடையவர்கள், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்கள் ஆகியவை முன்னுரிமைப்படுத்தப்படுகின்றன.
எனினும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படாத நிலையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இறுதிப் பட்டியல்
தயாரிக்கப்பட்டதும் அதனை உரிய இடங்களில் காட்சிப்படுத்துமாறு கோரிக்கை
விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
