எனக்கு உயிராபத்து அதிகரித்துள்ளது - சுதத்த திலகசிறி
தனது உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவார் என தாம் எதிர்வுகூறிய நாளிலேயே தமது பாதுகாப்பு நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமது உயிருக்கு அச்சுறுத்தல் கிடையாது என பொலிஸார் உறுதி செய்த போதிலும் தமக்கு காணப்பட்ட உயிராபத்து அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உயிர் அச்சுறுத்தல்
கடந்த காலங்களில் உயிர் அச்சுறுத்தல் ஐந்தாக இருந்தால் தற்பொழுது அந்த எண்ணிக்க 250ஆக உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனால் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்து தாம் வெளியிட்ட கருத்து தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் கேள்வி எழுப்பினால் அவர்களுக்கும் ஆரூடங்களை வெளியிட்டு அங்கிருந்து திரும்புவேன் என குறிப்பிட்டுள்ளார்.