விரைவில் இலங்கை மக்களுக்கு ரணில் சொல்லப் போகும் செய்தி..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் இது தொடர்பான அறிவித்தல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மக்களுக்கு நன்றி..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலையைக் கருத்திற் கொண்டு நேற்றையதினம் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
சுமார் 50 இலட்சம் ரூபா அடிப்படையில் மூன்று சரீரப் பிணைகளின் கீழ் வெளியில் செல்ல ரணில் விக்ரமசிங்க அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம் இலங்கையின் அரசியல் பரப்பில் மிக அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், வைத்தியசாலையில் இருந்து அவர் வெளியேறி, அவரது உடல் நிலை சீரானதும் நாட்டு மக்களுக்கு அவர் சிறப்பு உரையாற்றுவார் என்று கூறப்படுகின்றது.
மேலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு கடந்த சில நாட்களாக ஆதரவாக இருந்த பொதுமக்களுக்கு ரணில் தரப்பில் இருந்து நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
