முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மறைவு.. LPL போட்டிகளில் ஒரு நிமிட மௌன அஞ்சலி
முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று(18.07.2026) இடம்பெறவுள்ள LPL போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
இந்த போட்டிகள் கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவு
இது தொடர்பில் வெளியான அறிக்கையில்,
சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. சர் கேரி சோபர்ஸ், இலங்கை கிரிக்கெட்டுடன் மிகவும் சிறப்பான மற்றும் நீண்டகாலத் தொடர்பைக் கொண்டிருந்த ஒரு மாபெரும் மனிதர் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக 1980-களின் முற்பகுதியில், அவர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

அதன் பின்னர், 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
இவ்வளவு தொண்டுகளை இலங்கை கிரிக்கட்டிற்காக செய்த சர் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக குடும்பத்தினருக்கு தனது இரங்கலை இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
உலக கிரிக்கெட் விளையாட்டுக்கு அவர் விட்டுச்சென்ற மகத்தான பாரம்பரியம், பல தலைமுறை வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri