கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர்
கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபரை தலா 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri