புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது
2021, அக்டோபர் 16 முதல் 31 வரை பின்பற்றப்பட வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அக்டோபர் 21 வரை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கான விலக்குகளுடன் தொடரும், அத்தியாவசியமற்ற பயணங்கள் தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்படுள்ளது.
மறு அறிவித்தல் வரை பொதுக் கூட்டங்கள் மற்றும் விருந்துகளுக்கு அனுமதி இல்லை. திருமணங்கள், வெளியில் விழாவாக நடத்தப்படும் போது 75 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
இறந்தவர்களின் உடலத்தை விடுவித்த 24 மணி நேரத்திற்குள் 20 பங்கேற்பாளர்களுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட வேண்டும்.
இதற்கிடையில், முன்பள்ளிகள் 50 சதவீத திறனுடன் அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பிரத்தியேக கல்வி வகுப்புகள் அனுமதிக்கப்படவில்லை.
சுகாதார வழிகாட்டுதல்களின்படி பல்கலைக்கழகங்கள் செயல்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் அக்டோபர் 21இல் இருந்து 25 வீத ரசிகர்களுடன் திறக்கப்படலாம். சமய ஒன்றுக்கூடல்களுக்கு அனுமதி இல்லை
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri