இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளரான கிறிஸ் சில்வர்வுட் பதவி விலகியதை தொடர்ந்து, வெற்றிடமாக உள்ள பதவிக்கு தற்காலிகமாக சனத் ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு பொருத்தமானவர் நியமிக்கப்படும் வரை சனத் ஜயசூரிய அந்தப் பொறுப்பினை வகிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிக்கு இடையே நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய செயற்படுவார் என கூறப்பட்டுள்ளது.
கிறிஸ் ரோஜர்ஸ்
சனத் ஜெயசூரிய தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணிபுரிந்து வருவதுடன், நடந்து முடிந்த உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளுக்கான ஆலோசகராக அவர் செயற்பட்டிருந்தார்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிறிஸ் ரோஜர்ஸை நியமிக்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான 46 வயதுடைய கிறிஸ் ரோஜர்ஸ் தற்போது விக்டோரியா மாநில அணிக்குப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.
கிறிஸ் ரோஜர்ஸுடனுடனும் மேலும் இரண்டு வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுடனும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |