செம்பியன்ஸ் தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும்: பிசிபி தலைவர் திட்டவட்டம்
2025ஆம் ஆண்டு செம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஐசிசி 2025ஆம் ஆண்டுக்கான செம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
புள்ளிப்பட்டியளின் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான்
அதன்படி செம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமாகி தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன.

இதனால் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி மோதும் ஆட்டம் மட்டும் வேறு இடத்தில் நடைபெறும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ''2025ஆம் ஆண்டு செம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படும்.
இந்திய கிரிக்கெட் அணி குறித்து நான் தற்போது எந்த கருத்தும் கூறமாட்டேன். ஆனால் இன்ஷா அல்லாஹ் பாகிஸ்தானுக்கு இந்தியா வருவது குறித்து நல்ல செய்தியை கேட்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri