ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்
எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகளை முன்னிட்டு கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச புதிய மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா பொதுஜன சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் சமாதான நீதவான்கள் அமைப்பின் தேசிய அழைப்பாளராக சிந்தக அமல் மாயாதுன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனம்
மாவட்ட அமைப்பாளர்களாக கே.ஜி. மதுஷன் ஹரிந்ர, ஜனித் காஷன், ஹரிணி விஜேதுங்க மற்றும் பிரபல நடிகை ருவந்தி மங்கலா பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கே. ராமகிருஷ்ணன் மற்றும் ரவீந்திரன் ஹரேஷ் ஆகியோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்களும் கலந்து கொண்டார்.
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam