வவுனியாவின் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊழலுக்கு எதிராக சுவரொட்டிகள்
வவுனியாவின் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊழலுக்கு எதிராக சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊழலுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள அறிவித்தல் பலகைளிலும், சுவர்களிலும் இவை ஒட்டப்பட்டுள்ளன.
ஊழலுக்கு எதிராக சுவரொட்டிகள்
அதில், '' வவுனியா மாநகர மக்களே ஊழல்வாதிகளுக்கு துணை நிற்காதீர், ஊழல் புரிவது நீங்கள் பாதிக்கபடுவது மக்களா? சொகுசு வாழ்க்கை உங்களுக்கு சுமை மட்டும் மக்களுக்கு, லஞ்சம் பெறுவது நீங்கள் பாதிக்கப்படுவது மக்கள்'' என பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளே நகரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இருப்பினும், குறித்த பதாதைகளில் யாரால் காட்சிப்படுத்தப்பட்டது என உரிமை கோரப்படாத நிலையில் உள்ளது.
வடக்கு ஆளுனரால் வவுனியா மாநகரசபை மேயர் பதவி நீக்கத்திற்கு எதிராக கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் என்பவற்றுக்கு அழைப்பு விடப்பட்ட நிலையில் இப்பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்த முயற்சிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை! வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு


பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam