பிரித்தானியாவில் பரவும் கோவிட்டினால் இலங்கைக்கும் ஆபத்து
பிரித்தானியா முழுவதும் Eris என அழைக்கப்படும் கோவிட்டின் புதிய மாறுபாடு வேகமாக பரவி, சுகாதார அதிகாரிகள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வைரஸின் புதிய மாறுபாடு குறித்த உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் Omicron, Eris, அல்லது EG.5.1 எனற அழைக்கப்படும் இந்த மாறுபாடு கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
புதிய மாறுபாடு
தற்போது இந்த மாறுபாடு ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு பரவ ஆரம்பித்தள்ள நிலையில் இலங்கையிலும் பரவும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பரவும் எந்தவொரு புதிய நோயும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், அது குறித்து சுகாதார அமைச்சு எப்போதும் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கோவிட் இணைப்பாளர் மருத்தவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
தயார் நிலையில் இலங்கை
பிரித்தானியாவில் பரவும் வைரஸைப் பொருத்தவரை, நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம் மற்றும் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |