ஒமிக்ரோன் பரவல்: தீவிரமாகும் இலங்கை சுகாதாரத்துறையின் முயற்சிகள்
இலங்கையில் இரண்டு புதிய ஒமிக்ரோன் துணை வகைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை கண்காணிப்பு முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
கோவிட் பாதிப்புகளில் தற்போது எந்த அதிகரிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. எனினும், சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கண்காணிப்பை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இந்தநிலையில், சுகாதாரத் துறையினர், உலகளாவிய மற்றும் உள்ளூர் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
அறிகுறிகள்
ஒமக்ரோனின் துணை வகையைச் சேர்ந்த இந்த மாறுபாடு முதன்முதலில் ஜனவரி 2025இல் அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் பல நாடுகளில் கண்டறியப்பட்டது.
தொண்டை புண், காய்ச்சல், இலேசான இருமல், சோர்வு, தசை வலி போன்றவை இதற்கான அறிகுறிகளான இருக்கும். இதேவேளை, இந்த புதிய மாறுபாடு முன்னரைப் போன்று கடுமையான நோயை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, பயப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
