இலங்கையில் புதிய கோவிட் திரிபு பரவுமா..! சுகாதார அமைச்சு விளக்கம்
இலங்கையில் புதிய கோவிட் - 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வாரங்களில், பல ஆசிய நாடுகளில் புதிய கோவிட் - 19 திரிபு பரவி வருவதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இதைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் பொது சுகாதாரத்தைத் தயார்படுத்தவும் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை சுகாதார நடைமுறைகள்
மேலும், இலங்கையில் சாத்தியமான தொற்றுநோய் சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்காக ஆய்வக ஆய்வு முறையும் செயற்பாட்டில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடிக்கடி கை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் உட்பட அடிப்படை சுகாதார நடைமுறைகளை எல்லா நேரங்களிலும் பராமரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
