வெள்ளவத்தை வீட்டுத்தொகுதியில் சிக்கிய அதிநவீன ஆயுதம் - விசாரணையில் வெளியான பரபரப்புத் தகவல்கள்
வெள்ளவத்தை - ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிகவும் பலம்வாய்ந்த அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சரான இந்த அரசியல்வாதி, 6 மாதங்களுக்கு முன்பு தனது சமையல்காரர் மூலம் ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு இந்த துப்பாக்கியை அனுப்பி, அதை ஒழித்து வைக்குமாறு அறிவுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெவ்லொக் வீட்டுத் தொகுதியில் வசிக்கும் 68 வயதுடைய ஒரு பெண்ணிடம் இந்த ஆயுதத்தை கொண்டு வந்து ஒப்படைத்த முன்னாள் அமைச்சரின் சமையல்காரரை கைது செய்வதற்காக நேற்று மாலை ஒரு சிறப்பு பொலிஸ் குழு அவிசாவளை பகுதிக்கு சென்றிருந்தது.
பாதுகாப்பு அதிகாரிகள்
விசாரணைகளில் இந்த முன்னாள் அமைச்சர் ஹெவ்லொக் வீட்டுத்தொகுதியில் வசிக்கும் 68 வயதுடைய ஒரு பெண்ணின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்துள்ளது.
பையில் T-56 துப்பாக்கி இருப்பது தெரியாமல் ஆயுதம் அடங்கிய பையை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்தப் பை 6 மாதங்களாக அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தது, நேற்று முன்தினம், அந்தப் பெண்ணின் மகன்களில் ஒருவர் அந்தப் பையை சுற்றுலாவிற்கு எடுத்துச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், அந்தப் பெண் பையையும் துப்பாக்கியையும் தனது காரின் பின்புறத்தில் விட்டுச் சென்றிருந்தார்.
இந்த நேரத்தில்தான் வீட்டுத்தொகுதியின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ஆயுதத்தை அவதானித்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் வெள்ளவத்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் வந்து ஆயுதத்தை ஆய்வு செய்தபோது, அது நவீன T-56 துப்பாக்கி என்பது தெரியவந்தது. அதற்கமைய, இந்த ஆயுதத்தை மறைத்து வைத்திருந்த 68 வயதுப் பெண்ணும் மற்றொரு பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பிரபல அரசியல்வாதி
அந்தப் பெண், அந்தப் பையை முன்னாள் அமைச்சரின் சமையல்காரர்களில் ஒருவர் தன்னிடம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் கைது செய்யப்பட உள்ளார். வடமத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரசியல்வாதியின் தந்தையும் ஒரு பலம்வாய்ந்த அரசியல்வாதியாக இருந்தார். தற்போது அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த ஆயுதம் ஏன் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டது, அந்த ஆயுதத்தால் என்ன குற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
