வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவிக்கு நடந்தது என்ன...! தவிக்கும் கணவன்
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயான 38 வயதான சாரங்கா உதேஷிகா பெரேரா என்ற பெண் 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்ய சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.
வீட்டின் நெருக்கடி உட்பட பல கனவுகளுடன் அவர் வெளிநாடு சென்றிருந்தார். கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு முன்பு இலங்கைக்குத் திரும்பி விடுவதாக அவர் தனது கணவரிடம் கூறியிருந்தார்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
எனினும் அதன் பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காதமையினால் அவரது கணவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 2.05 மணிக்கு அவர் இலங்கைக்கு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாரங்காவின் கணவர் பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையிடம் மேற்கொண்ட விசாரணையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது, ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் சாரங்கா 2 பொதிகளுடன் வாடகைக்கு எடுக்கப்பட்ட காரில் புறப்பட்டுச் சென்றமை தெரியவந்தது.
பொலிஸார் விசாரணை
இதையடுத்து, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் காரின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்து, ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்தனர்.
விசாரணையின் போது, தம்புள்ளை பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு அந்த பெண் சென்றதாக தெரிவித்துள்ளார்.
எனினும் தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வின் போது எந்தப் பெண்களும் இல்லை என்று குடியிருப்பாளர்கள் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
