அர்ச்சுனாவை பிரதேசவாதியாக சித்தரித்த அமைச்சர்..! சபையில் கடும் கூச்சல்
கிளிநொச்சியில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வேலை செய்ய முடியாது என பிரதேசவாதம் பேசும் அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் உரை இருப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(22.05.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சபையில் உரையாற்றிய அர்ச்சுனா, தான் எப்போதும் வடக்கில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, தெற்கிற்கு செல்ல கூடாது என கூறியதில்லை என தெரிவித்தார்.
அவதூறு வழக்கு
அத்துடன், தான் அவ்வாறு கூறியதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தமைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய முடியும் எனவும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.
இதனையடுத்து, உரையாற்றிய அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, ஆனையிறவு உப்பளத்தின் முகாமையாளர் கிளிநொச்சியில் வசிப்பவர் என்பதால் அவரை அங்கிருந்து இடம்மாற்றம் செய்யுமாறு அர்ச்சுனா கூறுவதாக சுட்டிக்காட்டினார்.
முகாமையாளராக பணியாற்றுபவரின் மொழி ஒன்றாக இருப்பினும் மதம் ஒன்றாக இருப்பினும் அர்ச்சுனா பிரதேசவாதம் பேசுவதாக அமைச்சர் கூறினார்.
இதனையடுத்து, எழுந்த அர்ச்சுனா, தனது மனைவி பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் எனவும் தான் பிரிவினைவாதம் பேசுபவர் இல்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |