ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அபராதம்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நகரில் உணவகம் ஒன்றை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையை பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இரகசியத் தகவலின் அடிப்படையில் அக்கரப்பத்தனை பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, குறித்த உணவகத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதனை தொடர்ந்து அவர்களுக்கு ஒருவருக்கு 6000 ரூபாவும் மற்றவருக்கு 5000 ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்யப்பட்டதாக அக்கரபத்தினை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் (08) நுவரெலியா பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன் உணவகத்தில் விசேட தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
விசாரணை நடவடிக்கை
இதன்போது விசாரணைகளுக்கு தேவையான பல தகவல்களை பொலிஸார் சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்ராசி மற்றும் நோர்வூட் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டன.

அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமே இந்த சுற்றிவளைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான தகவல்களை உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மன்ராசி நகரில் இடம்பெற்ற இந்த போதைப்பொருள் முறியடிப்பு நடவடிக்கை, மலையகப் பகுதிகளில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam