திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் மோசடி - மத்திய வங்கியிடம் விளக்கம் கோரி காலக்கெடு
திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் மத்திய வங்கியின் பொறுப்புக் குறித்து விளக்கமளிக்க ஒருவார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமைக்கு மத்திய வங்கியும் பொறுப்பு என நிதி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே குறித்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க நிதி
திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்க நிதி தொடர்பான குழு கூடியது.

திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் திறைசேரி தயாரித்த அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan