இலங்கை அரசாங்கத்தின் பாதீடு தொடர்பில் பிட்ச் மதிப்பீடுகளின் வெளிப்பாடு
இலங்கை அரசாங்கத்தின் பாதீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக நிதி வருவாயை உயர்த்துவதற்கான அதிகாரிகளின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக சர்வதேச பிட்ச் (Fitch) மதிப்பீடுகள் கூறுகின்றன.
இந்த அணுகுமுறை வெற்றி பெற்றால், அது, இறையாண்மையின் கடனில் நீண்டகாலமாக நிலவும் பலவீனத்தைக் குறைக்கும் என்று ஃபிட்ச் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.
எனினும் கூட, நிதிக் கண்ணோட்டத்திற்கான அபாயங்கள் குறிப்பிடத்தக்கதாகவே உள்ளன. மேலும் நிதி ஒருங்கிணைப்பின் வேகத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள், நடுத்தர காலத்தில் கடன் குறைப்புக்கான வாய்ப்புகளை பாதிக்கலாம்.
தற்காலிக பாதீட்டு பற்றாக்குறை
பாதீட்டின் அறிவிப்புகளில் பெரும்பாலானவை, டிசம்பர் 2024 மதிப்பீட்டின் போது, இலங்கையின் மதிப்பீட்டை 'சுனு' (RD) இலிருந்து 'CCC+' ஆக மேம்படுத்திய போது செய்யப்பட்ட தமது அனுமானங்களுடன் ஒத்துப்போகின்றன என்று பிட்ச் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.
எடுத்துக்காட்டாக, 2024இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8வீதம் என்ற தற்காலிக பாதீட்டு பற்றாக்குறை, பிட்ச்சின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்தது என்று பிட்ச் மதிப்பீடுகள் குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையில், கடனை பாதிக்கும் மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொண்டால் இலங்கை அரசாங்கத்திற்கு பதிலளிக்கும் திறன் குறைவாக இருக்கக்கூடும் என்று பிட்ச் மதிப்பீடுகள் கூறுகின்றன.

ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் குடும்பத்துடன் சுட்டுக்கொலை! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஷாலினி புதிய தொடரில் கமிட்டாகியுள்ளாரா? வைரலாகும் போட்டோ Cineulagam

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
