எரிபொருள் விநியோகம்! சுகாதாரத்துறையினருக்கு வெளியாகவுள்ள புதிய சுற்றறிக்கை
வைத்தியர்களின் சேவை தேவைக்கு ஏற்ப, எதிர்காலத்தில் தடையின்றி எரிபொருளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது என்று சுகாதாரப்பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ சுற்றறிக்கை
சுகாதாரத் துறையினரின் சேவைத் தேவையின் அடிப்படையில், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய எரிபொருள் அளவைத் தீர்மானித்து, அது தொடர்பான உத்தியோகபூர்வ சுற்றறிக்கையொன்றை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை மட்டுமன்றி, நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஏனைய விசேட தொழில் பிரிவுகளில் ஈடுபடும் வாகனங்கள் குறித்தும் அரசு கவனம் செலுத்தியுள்ளது.
இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிடப்படவுள்ளன.
எரிசக்தி நெருக்கடி
இந்த விசேட வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்று பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan