ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் சர்ச்சை - இலங்கைகக்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ஷ்டம்
இலங்கை ஊடாக புதிய சரக்கு போக்குவரத்து பாதையொன்று திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன லெம்போர்கினி ரகத்தைச் சேர்ந்த 14 சொகுசு கார்கள், இலங்கை ஊடாக டுபாய் மற்றும் கட்டார் நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையில் சர்ச்சை
இத்தாலில் இலிருந்து கடல் மார்க்கமாக அந்த வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அங்கிருந்து 40 அடி நீளமுடைய 7 கொள்கலன்களில் ஏற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அதன் பின்னர், இந்த மோட்டார் வாகனங்கள் மிகப்பெரிய சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் மற்றும் கட்டாரின் தோஹா நகரங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கார்கள் ஒவ்வொன்றின் குறைந்தபட்ச விலை இலங்கை நாணயத்தில் 50 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்போர்ட்ஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு காரின் விலை சுமார் 100 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதிய சரக்கு போக்குவரத்து பாதை காரணமாக இலங்கைக்கும் பொருளாதார ரீதியாக நன்மை ஏற்படும் நிலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த மோட்டார் வாகனங்களின் போக்குவரத்துப் பொறுப்பை டென்மார்க்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏற்றுள்ளது.
இந்த மோட்டார் வாகனங்கள் சில நாட்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்த மோட்டார் வாகனங்களை ஏற்றிய விமானம் இன்று டுபாய் மற்றும் தோஹா நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.