புதிய அமைச்சரவையில் பசில் இல்லை! விமல், உதய, வாசுதேவவுக்கு இடம்
புதிய அமைச்சரவையுடன் இடைக்கால நிர்வாகம் அமையும் பட்சத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது பொறுப்பை இழக்க நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் டிரான்; அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் அமைச்சரவைப் பதவிகளை வகித்த வீரவன்ச மற்றும் கம்மன்பில ஆகியோர் பசில் ராஜபக்சவை விமர்சித்தமையை தொடர்ந்தே அவர்களின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டன.
அதன் பின்னர், எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி இருக்க நாணயக்காரவும் தீர்மானித்தார்.
இந்தநிலையில் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கவுள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்



