இந்திய கிரிக்கெட் சபைக்கு புதிய தலைவர் நியமனம்
இந்திய கிரிக்கெட் சபையின் தலைவராக முன்னாள் உள்நாட்டு வீரரும் நிர்வாகியுமான மிதுன் மன்ஹாஸ் இன்று(28) ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக மன்ஹாஸ் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், மும்பையில் இடம்பெற்ற சபையின் ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் சபை
துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் தேவஜித் சைகியா செயலாளராக நீடிப்பார் என்று இந்தியகிரிக்கெட்சபை தெரிவித்துள்ளது.
45 வயதான மன்ஹாஸ், இந்திய தேசிய அணிக்காக ஒருபோதும் விளையாடவில்லை, ஆனால் அவரது முதல் தர விளையாட்டு வாழ்க்கை முடிந்ததும் விளையாட்டு நிர்வாகத்தில் ஈடுபட்டார்.
புதிய நியமனத்தின்படி, கடந்த ஒகஸ்ட்டில் ஓய்வை அறிவித்த ரோஜர் பின்னிக்கு பதிலாக மன்ஹாஸ் தலைவராக செயற்படவுள்ளார்.
157 உள்நாட்டு போட்டிகளில் 45.82 சராசரியாக 9,714 ஓட்டங்களை மன்ஹாஸ் பெற்றுள்ளார்.



