விரைவில் இறுதி செய்யப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைவு விரைவில் இறுதி செய்யப்படும் என்று குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையில் நீதி அமைச்சில் கூடியது.
குழுவின் அடுத்த கூட்டம்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நெரின் புல்லே, சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் அசங்க கரவிட்ட, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் (சட்டம்) பியமுந்தி பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் சட்ட அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சந்துன் குணவர்தன, லெப்டினன்ட் கேணல் மெண்டிஸ் மற்றும் பிற உயர் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்கான குழு இதுவரை 14 முறை கூடியுள்ளது.
குழுவின் அடுத்த கூட்டம் 22 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
