மல்லாகம் நீதிமன்றத்திற்கு புதிய பதில் மரண விசாரணை அதிகாரி நியமனம்
யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு புதிய பதில் மரண விசாரணை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் திடீர் மரணங்களுக்கான பதில் மரண விசாரணை அதிகாரியாகவே நமசிவாயம் பிறேம்குமார் நியமிக்கப்பட்டள்ளார்.
நீதியமைச்சின் செயலாளரால்...
யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை காலமும் கடமை புரிந்த திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாருக்கு மேலதிகமாக மேற்குறித்த பகுதிகளில் பணி புரிவதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சின் செயலாளரால் இந்த நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam