ஆர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியை கௌரவித்த கூகுள் நிறுவனம்
36 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்று கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் வெற்றி கிண்ணத்தை தட்டிச் சென்றது.
இந்த வெற்றியை கொண்டாதவர்கள் யாருமில்லை என்று கூறும் அளவிற்கு பல விடயங்கள் பதிவாகியுள்ளன.
கூகுள் நிறுவனத்தின் கெளரவிப்பு
இந்நிலையில் ஆர்ஜென்டினா அணியின் வெற்றியை கூகுள் நிறுவனம் டூடுலை வெளியிட்டு கெளரவித்துள்ளது.
பிரான்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டினா அணி பெனால்டி முறையில் 4-2 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.
Neuer Google Doodle, Thema "Celebrating the 2022 World Cup Champions: Argentina" :)#google #doodle #designhttps://t.co/5IG4O1DxLv pic.twitter.com/uVviUq96UL
— Google Doodles DE (@Doodle123_DE) December 19, 2022
இதை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுலை வெளியிட்டு கெளரவித்துள்ளதுடன் இந்த டூடுலை அனிமேட் செய்து வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி போட்டி
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் பிரம்மாண்டமான இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை (18.12.2022) நடைபெற்றது.
இந்த இறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்ஸும் தமது 3 ஆவது உலக சாம்பியன் பட்டத்தை குறிவைத்து களமிறங்கின.
இறுதி போட்டியில் ஆட்டத்தின் ஆரம்பத்திலே கோல் அடித்து மெஸ்ஸி ரசிகர்களுக்கு நம்பிக்கையை வழங்கி போட்டியை விறுவிறுப்பாகினார்.
இதற்கமைய ஆட்டம் தொடங்கிய 22 ஆவது நிமிடத்தில் பெனால்டியை பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற கணக்கில் ஆர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தது.
இதன் பின்னர் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது ஆர்ஜென்டினா அணிக்கு எதிராக கோல் போடும் முயற்சியில் பிரான்ஸ் அணி பல முயற்சிகளை மேற்கொண்டது. இந்த முயற்சிகளில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்தது.
ஆனால் பிரான்ஸை திணரடிக்கும் வகையில் 36 ஆவது நிமிடத்தில் டி மரியா இரண்டாவது கோலை அடித்தார். இதன் மூலம் ஆர்ஜென்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தனது அணிக்காக அவர் கோல் அடித்த உற்சாகத்தினை ஆனந்த கண்ணீர் சிந்தி வெளிப்படுத்தினார்.
போட்டியின் முதல் பாதியில் ஆர்ஜென்டினா அணி 2 - 0 என முன்னிலை வகித்தது.
அதிர்ந்து போன ஆர்ஜென்டினா
அதன் பின்னர் இரண்டவது பாதியில் ஆட்டம் முற்றிலும் ஆர்ஜென்டினா பக்கம் இருக்க, 80வது நிமிடத்தில் கிடைத்த சிறப்பான வாய்ப்பான பெனால்டி வாய்ப்பினை சாதூர்யமாக பயன்படுத்திய எம்பாப்வே கோலாக மற்றி பிரான்ஸ் அணிக்கு ஆறுதல் அளித்தார்.
ஆறுதலால் அணி மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும்போதே, 81வது நிமிடத்தில் எம்பாப்வே காற்றில் வந்த பந்தை அட்டகாசமாக கோலாக மாற்றினார்.
இதனால் ஒட்டுமொத்த பிரான்ஸ் அணியும் போட்டிக்குள் வந்ததது. போட்டி 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்க இரண்டாவது பாதி ஆட்டம் முடிந்தது.
இதன்போது மேலதிகமாக 30 நிமிடங்கள் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது.
மேலதிக ஆட்ட நேரத்தில் கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி மற்றுமொரு கோல் அடித்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.
இதற்கமைய மேலதிக ஆட்ட நேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ்ஸை பின்தள்ளி ஆர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
வரலாற்று சாதனை
ஆர்ஜென்டினா அணி தான் வெற்றி பெறும் என்று எண்ணும் போது மீண்டும் ஒருமுறை கைலியன் மப்பே தன்னை நிரூபித்தார்.
மற்றுமொரு பெனால்டி வாய்ப்பை தம்வசப்படுத்தி ஒரு கோல் அடித்து 3-3 என போட்டியை சமப்படுத்தினார்.
மேலதிக ஆட்ட நேரம் சமநிலையில் முடிந்ததால் இறுதி முடிவை எட்டுவதற்காக இரு அணிகளுக்கும் ஐந்து வாய்ப்புக்கள் அடங்கிய பெனால்டி முறை வழங்கப்பட்டது.
இந்த பெனால்டி முறையில் 4-2 என்ற கணக்கில் பிரான்ஸை ஆர்ஜென்டினா அணி வீழ்த்தி உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்தது ஆர்ஜென்டினா அணி.