ஒரு மணித்தியாலத்திற்குள் நடந்து முடிந்த கொடூரம்! கைதிகளுடனான பேச்சுவார்தையில் அதிகாரிகள் இழைத்த தவறு
முதல்நாளே சிறைச்சாலையில் வெடித்த மோதலால் இருவர் உயிரிழந்த நிலையில், மீண்டும் சிறைச்சாலை வழமை நிலைக்குத் திரும்பியது என்ற அதிகாரிகளின் தவறான கணிப்பே நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கொடூரத்திற்கு காரணம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
துரித நடவடிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் முதல் நாள் ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றியிருக்க வேண்டும்.
இவ்வாறு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மறுதினம் ஏற்பட்ட பாரிய மோதல் நிலை தவிர்க்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

உண்மையான நிலையை கணிப்பிடாமல், மாறாக கைதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் ஊடாக எட்டப்பட்ட தற்காலிக இணக்கப்பாட்டைக் கொண்டு அதிகாரிகள் செயலாற்றியமை தவறு என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளுக்கும், சிறை அதிகாரிகளுக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லையென்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அப்படியாயின், ஒரு மணித்தியாலத்திற்குள் திடீரென எப்படி ஒரு கொடூர வன்மமும், பகையும் உருவாக முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவசரமாக இடமாற்றப்படும் நீர்கொழும்பு சிறைச்சாலை பெண் கைதிகள்! அடுத்தடுத்து பதிவாகும் மரணங்கள் - தீவிரமடையும் விசாரணை
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri