முல்லைத்தீவு பொலிஸாருக்கும் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில் முறுகல்

Mullaitivu Sri Lanka Police Investigation
By Shan Jul 25, 2024 03:00 AM GMT
Report

முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று சிறப்பாக இடம்பெற்றுவந்த வேளை அதனை குழப்பும் முகமாக பாரிய மீன் வியாபாரம் மேற்கொள்ளும் வாகனம் வரவழைக்கப்பட்டு ஆலயத்திற்கு மின் வழங்கும் வயர் அறுக்கப்பட்டு பொங்கல் உற்சவத்தினை தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பமாகிய நிலையில் நேற்று முன்தினம் பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு நேற்று பொங்கல் உற்சவம் இடம்பெற்றது.

இனப்படுகொலைக்கு மன்னிப்புக் கோரிய அமைச்சரை மேற்கோள் காட்டி சபையை அதிரவைத்த சிறீதரன்

இனப்படுகொலைக்கு மன்னிப்புக் கோரிய அமைச்சரை மேற்கோள் காட்டி சபையை அதிரவைத்த சிறீதரன்

மின் தாக்கும் அபாயம்

இந்நிலையில் மாலை நேரம் ஆலய வளாகத்திற்குள் மீன் வியாபாரம் மேற்கொள்ளும் வாகனம் ஒன்றினை பொலிஸார் உள்ளே அழைத்து குறித்த வாகனத்தினால் ஆலயத்திற்கு செல்லும் மின்சார வயர் அறுக்கப்பட்டதனால் பொலிஸார் , பிக்கு மற்றும் ஆலய நிர்வாகத்தினருக்கிடைய முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

முல்லைத்தீவு பொலிஸாருக்கும் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில் முறுகல் | Neeraviyadi Pillayar Kovil Issue Conflict Police

இந்நிலையில் நேற்றைய தினம் பொங்கல் உற்சவம் நடைபெற்ற வேளை திட்டமிட்டு குழப்பும் நோக்கோடு ஆலய வளாக பகுதிக்குள் மீன் ஏற்றும் வாகனம் கொண்டுவரப்பட்டு ஆலயத்திற்கு மின் வழங்கும் வயர் அறுத்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஆலயத்தில் மின் தடை ஏற்பட்டிருந்தது. அத்தோடு அறுத்துவிடப்பட்ட மின் வயறினால் மின் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் ஆலய உற்சவத்தினை குழப்பும் நோக்கிலையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு! இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு! இலங்கைக்கு கிடைத்த இடம்

பல்வேறு நெருக்கடிகள்

அத்தோடு முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று (24) இடம்பெறவிருந்த நிலையில் நேற்று முன்தினம்(23) ஆலயத்திற்கு சென்ற பொலிஸ், இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினர் ஆலய பணிக்காக வருகை தந்த பூசாரி உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஆலய பூசகர் தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவு பொலிஸாருக்கும் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில் முறுகல் | Neeraviyadi Pillayar Kovil Issue Conflict Police

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து சட்ட விரோதமாக பௌத்த விகாரை அமைத்து பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்டு வந்திருந்தது.

தற்போது குறித்த ஆலயத்தின் வழிபாடுகள் தொடர்ச்சியாக ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்திய றோ

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்திய றோ

ஜேர்மனியில் மூடப்பட்ட பழமையான மசூதி : ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

ஜேர்மனியில் மூடப்பட்ட பழமையான மசூதி : ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US